Sunday, September 28, 2008

என் பக்தி

பிடித்து தைக்க இடம் இல்லாத அளவுக்கு
கிழிந்து போன சட்டை .....!
வாரினால் சீப்பே உடைந்து போகும் அளவுக்கு
சிக்கிப்போன தலை மயிர் ...!
என்னிடம் வந்து ஐந்து ரூபாய் கேட்டாள்
கையை விட்டு கிண்டி எடுத்து
இரண்டு ரூபாய் கொடுத்தேன் ....!
நீ தெய்வம் என்று சொல்லிவிட்டு
கும்பிட்டு சென்றாள் .....!

கழுத்து நிறைய மின்னிக்கொண்டு
தங்க மாலைகள் ...!
உடம்பு முழுக்க சுத்தி கட்டியபடி
காஞ்சிபுர பட்டு சேலை ....!
நான் போய் தெய்வமே என்று
கும்பிட்டுவிட்டு - ஆயிரம் ரூபாய்
போட்டுவிட்டு வந்தேன்
உண்டியலில் .....!

எனக்கு புரிந்தது

என் யன்னலுக்கு வெளியே
அந்த நிலவின் வெளிச்சம்
என் அறையின் விளக்கை
அணைத்தபின் தான் தெரிந்தது ......!

என் மனதின் குழப்பத்தை
நான் மறந்த போதுதான்
இந்த உலகும் குழம்பியிருப்பது
புரிந்தது ...!!!

Thursday, September 25, 2008

விசித்திரம்

எல்லோரும் நான் அழுவேன்என்று நினைக்கையில்
நான் சிரித்துக்கொண்டிருந்தேன் ......!
எல்லோரும் நான் சிரிப்பேன் என்று நினைக்கையில்
நான் அழுதுகொண்டிருந்தேன் ......!




Saturday, September 20, 2008

அந்த குழந்தை

என் மடியில் ஏறியிருந்த அந்த குழந்தை
என் கையில் இருந்த ரேகைகளை எண்ணிக்கொண்டிருந்தது ....!
எண்ணிமுடியாது என்பதால்
என் விரல்களை எண்ணத் தொடங்கியது
இடையில் கணக்கு பிழைத்துப் போனது ....!
என்னை ஒருதடவை பார்த்துவிட்டு
பேசாது இருந்துவிட்டது - இவள்
கைகளிலும் ஏதோ கோளாறு என்று ...!!!

Sunday, September 14, 2008

வித்தியாசம்

சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும்
ஒரு சின்ன வித்தியாசம் தான் .....!
ஒன்று நான் சிரிக்கும் போது
இன்னொன்று நான் சிரிப்பதுபோல் நடிக்கும் போது ....!

Saturday, September 13, 2008

திரும்பிவரும் என்றால்

கடந்து போன பாதைகள் எல்லாம்
திரும்பி வரும் என்றால் ....!
கலைந்து போன என் கனவுகளை
நான் நிஜுமாக்கிகொள்வேன்....!
தொலைந்து போன என் வேகத்தை
திருப்பி தேடிக்கொள்வேன் .....!
பிழைத்துப் போன என் வழிகளை
திருத்திக்கொள்வேன் .....!

முதல் தோல்வி

வாழ்க்கையில் முதல் தடவை
தோற்றுப்போகும் தான் வேல்வதெல்லாம்
ஒருவிஷயமே இல்லை என்று படுகிறது .....!!!!

குழந்தையின் சிரிப்பு

வாழ்க்கையின் ஓரத்துக்கே தள்ளிவிடப்பட்டவளாய்
பஸ்ஸின் ஓரத்து இருக்கையில் நான்
வானத்தை வெறித்துக்கொண்டிருந்தேன் ......!
திடீர் என்று அந்த குழந்தை என்னை
எட்டிபார்த்து சிரித்துகொண்டிருந்தது --
இல்லை நீ என்னும் வாழலாம் என்று சொல்வதுபோல் ......!!!!!

Tuesday, September 9, 2008

தடை

நான் எதை செய்யப்போகிறேனோ
அதற்கெல்லாம் தடை வந்துவிடுகிறது ....!
ஆனால் இன்று தடைகளையே காணவில்லை ....!
ஏனென்றால் நான் எதுவுமே செய்யவில்லை .....!

Monday, September 8, 2008

புதிதாய்

இந்த காலை பொழுது
எத்தனை தரம் வந்தாலும் ....!
இந்த இரவு
எத்தனை தரம் வந்தாலும் ...!
நான் வாழ வேண்டிய பொழுதுகள்
எல்லாமே புதிதாய் தான் இருக்கின்றது ...!
அதனால் தான் நான் இன்னும்
புதிதாய் இருக்கிறேன் - எனக்கு ....!

Sunday, September 7, 2008

முடிவு

என் இதயம் முடிவெடுத்தது
ஏத்துக்கொண்டது ....!
என் மனம் முடிவெடுத்தது
மறுத்துவிட்டது ....!

மழை

திடீர் என மழை பெய்தது ....!
யன்னல் ஓரமாய் எட்டிப்பார்த்தேன்
என் தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
சந்தோசமாய் குளித்துகொண்டிருந்தன .....!
வெளியே கட்டிவைத்திருந்த
நாய் குட்டி மட்டும்
அழுதுகொண்டு இருந்தது ....!

Saturday, September 6, 2008

வரம்

கடவுளே ....!
உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
ஒரு துளி மழை - அதற்கு
ஒரு சின்ன குடை - அதற்குள்
ஒரு சின்ன கதிரை - அதில்
ஒரு சின்ன பேனாவுடன்
ஒரு வெள்ளை தாளில் - நான்
என்னை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் ...!

கடவுளுக்கு தெரியும்

அந்த கடவுளுக்கு தெரியும்
எந்த நேரம் யாரை பிரிக்கவேண்டும்
எந்த நேரம் யாரை சேர்க்கவேண்டும்
எந்த நேரம் யாரை தனிமை படுத்தவேண்டும்
எந்த நேரம் யாரை சிறுமை படுத்தவேண்டும்
எந்த நேரம் யாரை பெருமை படுத்தவேண்டும் என்று ....!

Friday, September 5, 2008

ஒரு பயம்

கவிதைகளை எழுதிவிட்டு
உனக்கு காட்டும்போதெல்லாம்
எனக்குள் ஒரு பயம் ....!
ஏனென்றால் என் கவிதைகளுக்கு
பொய் சொல்லத்தெரியாது....!

சில நிமிடங்கள் நான் ....!

அடை மழையின் பின்
தெளிந்து கிடக்கும்
அந்த பாதை போல
சில நிமிடங்கள் நான் ....!

பல காலங்கள்
விறிச்சோடி கிடக்கும்
சோலை போல
சில நிமிடங்கள் நான் ....!

பலர் வாழ்ந்து சென்ற
கூட்டு குடும்ப வீடு போல
சில நிமிடங்கள் நான் ....!

பலர் சாதனைகள் படைத்து
விட்டு சென்ற மைதானம் போல
சில நிமிடங்கள் நான் ....!

Thursday, September 4, 2008

உனக்காக .....

உனக்காக நான் கதைப்பேன்
எனக்காக நீ
கேட்பாய் என்றால் ....!
உனக்காக நான் வரைவேன்
எனக்காக நீ
பார்ப்பாய் என்றால் ...!
உனக்காக நான் எழுதுவேன்
எனக்காக நீ ...!
வாசிப்பாய் என்றால் ...!
உனக்காக நான் என்னை
செதுக்குவேன்
எனக்காக நீ என்னை
ரசிப்பாய் என்றால் ...!

Tuesday, September 2, 2008

உனக்கு ஒரு கவிதை

உனக்காக கவிதை எழுதும் போதுதான் - என்னிடம்
வார்த்தைகள் வருவதில்லை ....!
எண்ணங்கள் நிலைப்பதில்லை ....!
நினைவுகள் திரும்புவதில்லை ....!
ஏன் என்றால் எனக்கு
ஏதோ கிடைக்கவில்லை .....!

நான் உறங்குவது பூவில்

என் தூக்கத்தை கெடுத்துவிட்ட - அந்த
சுட்டெரியும் சூரியன் மேல்
எனக்கு கோவம் ....!
கொட்டிக்கொண்டிருக்கும் மழை மேல்
எனக்கு கோவம் ....!
சுத்திக்கொண்டு இருக்கும் காற்றின் மேல்
எனக்கு கோவம் ....!
இவைக்கு எல்லாம்
இந்த பூவின் மென்மை எப்படி தெரியும் ....!

அர்த்தம் இல்லாத இவை

சில அர்த்தம் இல்லாத
நினைவுகள்
சில அர்த்தம் இல்லாத
கவலைகள்
சில அர்த்தம் இல்லாத
கோவங்கள்
சில அர்த்தம் இல்லாத
சிரிப்புகள்
எல்லாம் இன்று அர்த்தம் உள்ள
புது வாழ்க்கை ஆனது உன்னால் ......!

Monday, September 1, 2008

புறக்கணிப்பு

அன்பு புறக்கணிக்கப்படும்பொழுது
வெறுப்பாகிறது ....!
காதல் புறக்கணிக்கப்படும்பொழுது
கசப்பகிறது ....!
கவலை புறக்கணிக்கப்படும்பொழுது
கல்லாகிறது ...!

எங்கேயோ போகிறாய் ....!

எனக்கு தெரியும் - நீ
எங்கேயோ போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
என்னை விட்டு போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
எதற்காக போகிறாய் ....!
எனக்கு தெரியும் - நீ
எனக்காக போகிறாய் ....!